உங்களது பிரசவம் தொடர்பான தரவுகளை ஏன் நாம் சேகரிக்கின்றோம்?
மற்ற பெண்களுக்கு வழங்கும் சேவையை மேம்படுத்தவும், பாடநெறியில் சேரும் மற்ற பெண்களுக்கு உதவவும் உங்கள் சம்மதத்துடன் தகவல்களைச் சேகரிக்கின்றோம். உங்கள் தனிப்பட்ட எந்த தகவல்களும் மூன்றாம் தரப்பினருக்கோ அல்லது மூன்றாம் தரப்பினரோடு சம்பந்தப்பட்டவர்களுக்கோ ஒருபோதும் கொடுக்கப்பட மாட்டாது. உங்கள் பிரசவத்திற்குப் பிறகு புள்ளிவிபரத் தரவுகளை சேகரிப்பதற்கு இணங்கினால், உங்கள் பிரசவம் பற்றிய சில குறிப்பிட்ட கேள்விகள் கூடிய மின்னணு பல் தேர்வு கேள்வித் தொகுப்பொன்றை உங்களுக்கு அனுப்புவோம். புள்ளிவிவரத் தரவிலிருந்து (தயவுசெய்து உங்கள் தனிப்பட்ட தரவு மற்றும் GDPR பற்றிய கூடுதல் தகவலுக்கு தனியுரிமைக் கொள்கையைப் பார்க்கவும்) உங்களது தனிப்பட்ட தரவைப் பாதுகாக்க கேள்வித் தொகுப்பு தெரிந்தே அநாமதேயமாக அமைக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, இக் கேள்விகளைக் கொண்டிருக்கும், –
- மருத்துவச்சி உங்களை முதல் முதலில் தொட்டு பரிசோதித்த போது, உங்கள் பிறப்பு வாய் எத்தனை சென்டிமீட்டர் திறந்திருந்தது?
- பிரசவத்தின் போது நீங்கள் எந்த வலி நிவாரணி மருந்தைப் பயன்படுத்தினீர்கள்?
- பிள்ளையைப் பெற்றெடுக்க நீங்கள் எந்த இருப்பு நிலையைப் பயன்படுத்தினீர்கள்?
- உங்களது பிரசவம் எவ்வகையானது?
இத் தகவல்களின் உதவியுடன், பிரசவத்திற்கு முன்னால் வழங்கும் இந்த ஆன்லைன் எடியுகேஷன் ப்பிராங்கிராமின் விணைத்திறனைக் காட்டுவதற்கான புள்ளிவிவரங்களை எம்மால் தயாரிக்க முடியும்.