நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் எந்தவொரு தனிப்பட்ட தரவையும் அசல் பிரசவ நிறுவனமான நாம் மதிப்பதோடு, அதை பாதுகாப்போம் என உறுதியளிக்கின்றோம். நாம் உங்கள் தரவைச் சேகரிக்கும் போது எதிர்பார்க்காத எதையும் செய்யக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றோம். மே 2018 இல், பொதுத் தரவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறைகளுக்கு (GDPR) இணங்க, விருப்பமான தொடர்பாடல் வழிகள் (மின்னஞ்சல், SMS, தொலைபேசி அல்லது இடுகை) மூலம் தகவல் தொடர்புகளை பெறுவதில் பிரச்சினை ஏதும் இல்லை என வெளிப்படையாகத் தெரிவிப்பவர்களுக்கு மட்டுமே தகவல்களை அனுப்புவோம்.
நாங்கள் பின்வரும் வழிகளில் தகவல்களைச் சேகரிக்கின்றோம்: எங்கள் அசல் பிரசவப் பயிற்சிப் பட்டறையை ஆன்லைனில் பயன்படுத்த, எங்கள் பொருட்களை வாங்க அல்லது எங்களுடன் தொடர்புகொள்ள பதிவுசெய்ய உங்கள் தகவலை கொடுக்கும் போது, நேரடியாக எங்களுக்கு கொடுக்கின்றீர்கள். சில சமயங்களில் நீங்கள் எங்களிடமிருந்து பொருட்களை வாங்கும் போது, உங்கள் தகவல் எங்கள் மற்றய அமைப்பான 27 இணைய நிர்வாகத்தால் சேகரிக்கப்படும். ஆனால் எல்லா நேரங்களிலும் உங்கள் தரவுகளுக்கு நாங்கள் பொறுப்பாகும். Facebook, WhatsApp அல்லது Twitter போன்ற சமூக வலைத்தளங்களின் அமைப்புகள் அல்லது தனியுரிமைக் கொள்கைகளைப் பொறுத்து, அந்தக் கணக்குகள் அல்லது சேவைகளில் இருந்து நீங்கள் எங்களுக்கு தகவல்களை வழங்குவீர்கள். நீங்கள் எங்கள் இணையதளம் அல்லது பாடநெறியைப் பயன்படுத்தும் போது நாங்கள் அதைச் சேகரிப்போம். பெரும்பாலான இணையதளங்களைப் போலவே, எங்கள் தளத்தையும் நீங்கள் பயன்படுத்தும் விதத்தையும் மேம்படுத்த “குக்கீகளை” பயன்படுத்துகின்றோம். குக்கீகள் என்றால் இணையதளம் உங்களை நினைவில் வைத்திருக்கும். உங்கள் கணினி, தொலைபேசி அல்லது டேப்லெட்டுக்கு தளங்கள் அனுப்பும் சிறிய உரைக் கோப்புகள் ஆகும். அவை வலைத்தளத்துடன் தொடர்புகொள்வதை விரைவுபடுத்துதோடு, எளிதாகவும் ஆக்குகின்றன. உதாரணமாக உரைப் புலங்களில் உங்கள் பெயரையும் முகவரியையும் தானாக நிரப்புவது போன்றதாகும். அது போக, எமது இணையதளம் அல்லது பாடநெறியை அணுக நீங்கள் பயன்படுத்தும் சாதனத்தின் வகை மற்றும் அச் சாதனத்தில் உள்ள அமைப்புகள் உங்கள் சாதனத்தைப் பற்றிய தகவல்களை, அது எவ்வகையான சாதனம், எவ்வகையான ஒபரேடிங் அமைப்பு, சாதன உற்பத்தியாளர்கள் என்பதோடு சேர்த்து எங்களுக்கு வழங்கும். உங்கள் சாதனம் எந்த வகையான தகவலை எமக்குக் கொடுக்கும் என்பது பற்றிய கூடுதல் விவரங்கள் உங்கள் சாதன உற்பத்தியாளர் அல்லது ஆபரேடிங் அமைப்பு வழங்குநரிடம் இருக்கும்.
நீங்கள் அசல் பிரசவ பயிற்சிப் பட்டறையில் பதிவு செய்யும் போது, பின்வரும் தகவலை வழங்குமாறு கேட்கப்படுவீர்கள்:
பயிற்சிப் பட்டறையின் போக்குகள் மற்றும் பயன்பாட்டை பகுப்பாய்வு செய்வதற்கும், எங்கள் பயனர்களின் தேவைகளுக்கு சிறப்பாகப் பதிலளிப்பதற்கும் எங்கள் பொருட்களை மதிப்பாய்வு செய்வதற்கும் மேலே உள்ள தகவலை நாங்கள் சேகரிக்கிறோம். நாங்கள் உங்கள் தரவைப் பயன்படுத்துவோம்: நீங்கள் வேண்டும் சேவைகள், தயாரிப்புகள் அல்லது தகவலை உங்களுக்கு வழங்கவும், எங்களுடனான உங்கள் உறவின் பதிவை வைத்திருக்கவும், நீங்கள் எவ்வாறு தொடர்பு கொள்ள விரும்புகிறீர்கள் என்பதை நாங்கள் அறிவோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும், எங்கள் சேவைகள், தயாரிப்புகள் அல்லது தகவலை நாங்கள் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதைப் புரிந்து கொள்ளவும், ஆய்வுரீதியான கேள்விகளுக்கு பதிலளிக்கவும், விளைவுகளை மதிப்பீடு செய்யவும் மற்றும் பிரசவப் புள்ளிவிவரங்களை உருவாக்கவும், ஒரு நிறுவப்பட்ட முறையான பாணியில் ஆர்வமுள்ள மாறிகள் பற்றிய தகவல்களை சேகரித்து அளவிடவும், எந்த நோக்கங்களுக்காக அவை கையாளப்படுகின்றன மற்றும் எங்கள் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக உண்மையில் நமக்குத் தேவைப்படும் தனிப்பட்ட தரவை மட்டுமே சேகரிக்கின்றோம். நிறுவனம் தன்னிடம் உள்ள தரவை அவ்வப்போது மதிப்பாய்வு செய்து நமக்குத் தேவையில்லாதவற்றை நீக்கிவிடும். தரவு மாற்றம் எங்கள் தரவு சேகரிப்பின் நோக்கம் மாறினால், முன்மொழியப்பட்ட மாற்றங்களை மின்னஞ்சல் மூலம் அனைத்து பயனர்களுக்கும் தெரிவிப்போம். இதன் மூலம் அவர்கள் நீங்கிக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்குவோம் மற்றும் பொருத்தமான இடத்தில் அவர்களின் ஒப்புதலைப் பெறுவோம். குழந்தைகளின் தரவு 16 வயதிற்குட்பட்ட பயிற்சிப் பட்டறைப் பயனர்களிடமிருந்து நாங்கள் தகவல்களைச் சேகரித்து நிர்வகிக்கிறோம். ஏனெனில் அவர்கள் எங்கள் பட்டறையைப் பயன்படுத்த விரும்பும் பெற்றோராக இருக்கலாம். குழந்தையின் வயதுக்கு ஏற்ற வகையில் அதை நிர்வகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். 16 வயதுக்குட்பட்டவர்கள் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதற்கு முன், சாத்தியமான மற்றும் பொருத்தமான இடங்களில், நாங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் ஒப்புதலைப் பெறுவோம். நேரடி சந்தைப்படுத்தல், சந்தைப்படுத்தல் நோக்கங்களுக்காக நாங்கள் மூன்றாம் தரப்பினருக்கு தனிப்பட்ட விவரங்களை விற்கவோ அல்லது பகிர்ந்து கொள்ளவோ மாட்டோம். எங்கள் தயாரிப்புகளைப் பற்றி விசாரிக்க, வாய்ப்புகளைப் பற்றி விசாரிக்க அல்லது கருத்துக்களை வழங்க அல்லது புகார் செய்ய நீங்கள் எங்களைத் தொடர்பு கொள்ளும்போது, உங்கள் தொடர்பு விவரங்களை நாங்கள் சேகரித்து, பாதுகாப்பான உள்ளக CRM விற்பனை அமைப்பில் வைப்போம். இது உங்கள் விசாரணையைப் பதிவுசெய்து, உங்கள் சிக்கலைத் தீர்க்க எங்களின் பதிலைப் பதிவுசெய்ய எங்களுக்கு உதவுகிறது.
16. இழப்பு, தற்செயலான அல்லது வேண்டுமென்றே அழித்தல் அல்லது தனிப்பட்ட தரவு திருட்டு ஆகியவற்றின் அபாயத்தைக் குறைக்க, SHA ஹாஷிங்கைப் பயன்படுத்தி டிரான்ஸிட்டின் போது நிறுவனத்திடம் உள்ள அனைத்துத் தரவுகளும் குறியாக்கம் செய்யப்பட்டு NHS அங்கீகரிக்கப்பட்ட சர்வரில் ஹோஸ்ட் செய்யப்படுகின்றன. எனவே எங்களால் அசல் பிரசவப் பயிற்சிப் பட்டறையைப் பாவிக்கும் தனிப்பட்ட பயனர்களை அடையாளம் காண முடியாது. எங்கள் சர்வர் சேமிப்பகத்தில் உள்ள அனைத்து தனிப்பட்ட தரவுகளும் 2 காரணி அங்கீகாரத்தால் பாதுகாக்கப்படுகின்றன. எங்களிடம் உள்ள தகவல்களை கையாளக்கூடியவர்கள் யார் என்பதை நாங்கள் தொடர்ந்து மதிப்பாய்வு செய்கிறோம். இது உங்கள் தகவலை சரியான பயிற்சி பெற்ற பணிக்குழுவினால் மட்டுமே அணுக முடியும் என்பதை உறுதி செய்கிறது. இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைத் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் நிறுவனத்தால் சேகரிக்கப்பட்ட தரவு பகிரப்படாது அல்லது கையாளப்படாது. உங்களின் வெளிப்படையான மற்றும் முன்னதாக ஒப்புதலைப் பெற்றிருந்தால் மட்டுமே, பிற சந்தர்ப்பங்களில் உங்கள் தரவைப் பகிர்வோம். தனிப்பட்ட தரவு மீறல் ஏதாவது ஏற்பட்டால், தற்செயலான அல்லது சட்டவிரோதமான அழிவு, இழப்பு, மாற்றம், அங்கீகரிக்கப்படாத வெளியீட்டினால் இது ஏற்பட்டது அல்லது அனுப்பப்பட்ட, சேமிக்கப்பட்ட அல்லது செயலாக்கப்பட்டதை அணுகியதனாலா இது ஏற்பட்டது என நிறுவனம் மதிப்பிடும். தரவு மீறல்கள் தீவிரத்தன்மையைப் பொறுத்து வேறுபடுகின்றன. அத்தோடு, மேற்கண்ட வரையறைக்குள் வரும் அனைத்து தனிப்பட்ட மீறல்களும் புகாரளிக்கப்பட வேண்டியதில்லை. மீறலின் தாக்கம் தனிநபர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தினால், அந்த நபர்கள் உடனடியாக அறிவுறுத்தப்படுவார்கள். அத்தோடு, கண்டறியப்பட்ட இடத்திலிருந்து 72 மணி நேரத்திற்குள் ICO க்கு தெரிவிக்கப்படும். மீறல் மேலே உள்ள வரையறைக்குள் வரவில்லை அல்லது அதிக ஆபத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றால், மீறல் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு, முடிவிற்கான நியாயம் பதிவு செய்யப்படும். உங்கள் தரவை நாங்கள் எவ்வாறு நீக்குகிறோம்?- மின்னஞ்சல் அல்லது எழுத்துப்பூர்வமாக கோரிக்கை செய்து, நிறுவன நிர்வாகி உங்கள் தரவை எங்கள் phpMyAdmin அமைப்பிலிருந்து நீக்கலாம். கணினியில் இருந்து தரவு உடனடியாக நீக்கப்படும். அதன் பிறகு எந்தப் பயனர்களாலும் அல்லது அசல் பிரசவ நிறுவன ஊழியர்களாலும் மீட்டெடுக்க முடியாது. நீக்கப்படும் தரவை மீள மீட்டெடுக்க முடியாது. எதையும் நிரந்தரமாக நீக்குவதற்கு முன், கணினி நிர்வாகிக்கு உரிய முறையில் எச்சரிக்கை கொடுக்கப்படும். உங்கள் தரவை நாங்கள் எவ்வளவு காலம் சேமிப்போம்? எதிர்பார்க்கப்படும் காலக்கெடுவுக்குப் பிறகு ஆறு மாதங்களுக்கு எங்கள் கணினியில் தனிப்பட்ட தரவை நாங்கள் தொடர்ந்து வைத்திருப்போம். எப்போது நிறுவனத்தின் நிர்வாகி கணினியிலிருந்து அனைத்து பதிவுகளையும் நிரந்தரமாக நீக்குவார். எங்கள் நிறுவனம் மூடப்பட்டால் உங்கள் தகவலுக்கு என்ன நடக்கும்? எங்கள் நிறுவனம் மூடப்பட்டால், எங்கள் எல்லா தொடர்புகளின் தனிப்பட்ட மற்றும் முக்கியமான தொடர்புத் தகவலை நீக்க வேண்டும் என சட்டம் வேண்டுகின்றது. உங்கள் தகவலைப் அவ்வப்போது, புதுப்பிப்பது, உண்மையில் வரவேற்கத்தக்கது. உங்கள் மின்னஞ்சல் முகவரியை மாற்றினால், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பி எமக்கு தெரியப்படுத்துங்கள்.
அசல் பிரசவப் பயிற்சிப் பட்டறையைப் பயன்படுத்துவது, பின்வரும் விடயங்கள் உட்பட, பிற சாத்தியமான அபாயங்களுக்கும் உங்களை உட்படுத்தலாம்.
ஆபத்தை நீங்களாகவே பொறுப்பேற்று, அசல் பிரசவ ஆன்லைன் பயிற்சிப் பட்டறையைப் பயன்படுத்தவும். அசல் பிரசவ ஆன்லைன் பட்டறையைப் பயன்படுத்துவதால் ஏற்படும் காயங்கள், இழப்புகள் அல்லது சேதங்களுக்கு அசல் பிரசவ நிறுவனம் பொறுப்பேற்காது.
எமது தரவு பாதுகாப்பு அதிகாரி, பதிவுசெய்யப்பட்ட மருத்துவச்சி Zoe Wright யோடு தொடர்பு கொள்ள, பின்வரும் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். : [email protected] தலைப்பு உள்ள இடத்தில், data protection என்று கொடுக்கவும் அல்லது Zoe Wright, The Real Birth Company, The Old Magistrates Court, Gaol Street, Hereford, HR1 2HU ற்கு கடிதம் போடவும்.
எமது மருத்துவ பாதுகாப்பு அதிகாரி, பதிவுசெய்யப்பட்ட மருத்துவச்சி Zoe Wright யோடு தொடர்பு கொள்ள, பின்வரும் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். : [email protected] தலைப்பு உள்ள இடத்தில், clinical safety என்று கொடுக்கவும் அல்லது Zoe Wright, The Real Birth Company, The Old Magistrates Court, Gaol Street, Hereford, HR1 2HU என்ற முகவரிக்கு கடிதம் போடவும்.
உங்கள் தனிப்பட்ட தரவை கையாள்வதை நிறுத்துமாறு எங்களிடம் கேட்க உங்களுக்கு உரிமை உண்டு. நாங்கள் உடனடியாக நீங்கள் வேண்டிக் கொள்வதைப் போல் செய்வோம். உங்களைப் பற்றி நாம் சேகரித்து வைத்திருக்கும் தகவலின் நகலைக் கேட்க உங்களுக்கு உரிமை உண்டு. உங்கள் தரவை நீக்குமாறு கேட்க உங்களுக்கு உரிமை உண்டு. உங்கள் தனிப்பட்ட தரவை பார்ப்பதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. உங்கள் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்துவதை எதிர்க்க உங்களுக்கு உரிமை உண்டு. உங்கள் தனிப்பட்ட தரவின் பெயர்வுத்திறனுக்கான உரிமை உங்களுக்கு உண்டு. ஒப்புதலை திரும்பப் பெற உங்களுக்கு உரிமை உண்டு. எந்தவொரு தரவு கோரிக்கைகளுக்கும் 1 மாதத்திற்குள் பதிலளிப்போம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது கவலைகள் இருந்தால், எங்களை 01432 345534 என்ற எண்ணிக்கு தொடர்பு கொள்ளவும் அல்லது [email protected]. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். நீங்கள் தகவலை பார்க்க விரும்பினால், நீங்கள் யார் என்பதை எங்களுக்கு நிரூபிக்க வேண்டும். தனிப்பட்ட தரவை வெளியிட முன் நீங்கள் அடையாளச் சான்றிதழை அனுப்ப வேண்டும். இதை எங்கு அனுப்புவது என்பதை அறிய எங்களை தொடர்பு கொள்ளவும்.
இந்த தனியுரிமைக் கொள்கையை நாம் அவ்வப்போது மாற்றலாம். உங்கள் தனிப்பட்ட தகவலை நாங்கள் கையாளும் விதத்தில் ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்தால், எங்கள் இணையதளத்தில், அசல் பிரசவப் பயிற்சிப் பட்டறை அல்லது உங்களை நேரடியாகத் தொடர்புகொண்டு இதைத் தெளிவுபடுத்துவோம். உங்களிடம் ஏதேனும் கேள்விகள், கருத்துகள் அல்லது பரிந்துரைகள் இருந்தால், [email protected] க்கு மின்னஞ்சல் மூலம் எங்களுக்குத் தெரியப்படுத்தவும்.