அசல் பிரசவ டிஜிட்டல் ப்ரோஙாமிற்கு உங்களை வரவேற்கின்றோம். குழந்தையை பெற்றெடுக்கும் போது, நடைபெறும் அற்புதமான மாற்றங்களை ஆழமாக உங்களுக்கு தருவதற்காக இந்த ப்ரோஙாம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 6 மணித்தியாளங்கள் கொண்ட இந்த பாடநெறி, மாடியுல் மாடியுலாக எழுதப்பட்டுள்ளது. ஒரு மாடியுல் முடிந்தவுடன், அடுத்த மாடியுலுக்கு செல்ல முடியும். எந்த நேரத்திலும் நீங்கள் கற்று முடித்த மாடியுலுக்கு, செல்ல முடியும்.
நீங்கள் கற்கும் சில தலைப்புகள்:
எமது அசல் பிரசவ நிறுவனத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று, நாம் செய்யும் எந்த முயற்சியிலிருந்தும் கற்றுக்கொள்வது தான். அசல் பிரசவ ஆன்லைன் பயிற்சிப் பட்டறையின் உருவாக்கத்தின் போது நாங்கள் பின்வரும் படிமுறைகளைச் சேர்த்துள்ளோம்:
கில் ஹொட்டன் - ஆலோசக மருத்துவச்சி லிவர்பூல் பெண்கள் லிவர்பூல் மகளிர் மருத்துவமனையில் ஆண்டுக்கு சராசரியாக 8,000 குழந்தைகள் பிறக்கின்றன. அத்தோடு, பல்வேறு சமூகங்களின் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளை கொடுத்து, பரந்த பகுதியை உள்ளடக்குகின்றது. பல காரணங்களுக்காக இச் சமூகத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்களோடு கலந்துரையாடுவது எப்போதுமே சவாலாகவே இருந்து வருகின்றது. இச் சவால்களைப் பற்றி அறிந்திருந்தாலும், எங்களின் தற்போதைய கல்வித் திட்டத்துடன் ஒத்துப்போகும் வகையில் அவற்றை எதிர்கொள்ளும் திறன் எங்களிடம் இருந்ததில்லை. அசல் பிரசவ நிறுவனத்தைச் சேர்ந்த ஸோ ரைட் அவர்களின் புதுமையான பன்மொழி ஆன்லைன் பயிற்சிப் பட்டறையின் விவரங்களுடன் என்னை அணுகியபோது, லிவர்பூல் பெண்களின் தற்போதைய மகப்பேறு சேவைக்கு இதுபோன்ற திட்டம் கொண்டு வரக்கூடிய பலன்களை உடனடியாகக் ஊகிக்க முடிந்தது. இப்பாடநெறி நன்கு ஆய்வு செய்யப்பட்டு, ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, எவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டதாக நான் பார்க்கின்றேன். மிக முக்கியமாக இந்த நாட்களில் கணினி, டேப்லெட் மற்றும் தொலைபேசி மூலம் பாவித்துக் கொள்ளலாம். கிராபிக்ஸ் மற்றும் வீடியோ கிளிப்புகள் தகவலை கொடுப்பதோடு, உண்மையில் அவை இப்பாடநெறியை இன்னும் மெருகூட்டுகின்றன. சிலநேரம் கலாச்சார ரீதியாகவும் அவை பயன்மிக்கது. பிரசவத்தின் உடலியல் பற்றிய புரிதலை அனைத்து பெண்களுக்கும் வழங்குகின்றன. தற்போதுள்ள எங்களுடைய பிரசவத்திற்கு முந்தைய கல்வி மாதிரியைப் பயன்படுத்தி நம்மால் முடிந்ததை விட அதிகமான பெண்களைச் சென்றடையும் திறனை இந்தத் திட்டம் கொண்டுள்ளது. அத்தோடு, இது வரவிருக்கும் நான்கு மொழிகளில் ஏற்கனவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்போது பெரும்பான்மையான பெண்களுக்கு ஒரு புரிதல் மற்றும் பிரசவத்தைத் தொடங்குவதற்கு முன் செய்யக்கூடிய நேர்மறையான தேர்வுகளை எம்மால் கொடுக்க இயலுமாக உள்ளது. சோதனைத் திட்டத்தில் பங்கேற்பதன் மூலம் LINK மற்றும் Midwiferyå குழுக்களுக்கு இவ் வளத்தை எமது உள்ளூர் பெண்களுக்கு அவர்களின் வழமைப் போல் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளன. இதுவரையிலான முடிவுகள் திருப்தியளிக்கின்றன. சோதனையில் பங்கேற்பவர்கள், பாடநெறியின் முடிவில் வைத்துள்ள அநாமதேய ஆன்லைன் சார்வேயை முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள். எனவே மறைந்திருக்கும் கட்ட சேர்க்கைகள், பிரசவத்தில் வலி நிவாரணி பயன்பாடு மற்றும் நேர்மறையான பிரசவ அனுபவத்திற்கு இந்த திட்டம் பங்களித்ததா என்பதை நாங்கள் கண்காணிக்க முடியும். நோயாளி பராமரிப்பு, நோயாளி பாதுகாப்பு, சேவையின் தரம், முடிவெடுப்பது மற்றும் செலவு சேமிப்பு ஆகியவற்றில் இத் திட்டம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதைப் பார்க்க இத் தகவல் மதிப்பீடு செய்யப்படும்.